விஜய் பட ஷூட்டிங்கில் பங்கேற்ற பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா உறுதி..!
 

 
விஜய் பட ஷூட்டிங்கில் பங்கேற்ற பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா உறுதி..!

நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழில் ‘முகமூடி’ படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பிறகு ராசியில்லாத நடிகை என்று தெலுங்கு சினிமா பக்கம் போனவருக்கு வாய்ப்புகள் மழையாக குவிந்தன. இதன்மூலம் இப்போது இவர் தான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார்.

கடந்தாண்டு பொங்கலுக்கு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘அலா வைகுந்தபுரம்லோ’. இதனுடைய அசுர வெற்றிக்கு பிறகு இந்தியாவே கொண்டாடும் நடிகையாகிவிட்டார். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் ஜியார்ஜியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தவிர, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அவர் ட்விட்டரில் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

From Around the web