கொரோனா பேரிடர் நாயகன் சோனு சூட்டுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

 
சோனு சூட்
கொரோனா காலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்கான உதவிய நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய மொழிப் படங்கள் மற்றும் பல்வேறு இந்திப் படங்களில் உறுதுணை கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்தவர் சோனு சூட். கொரோனா பரவல் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்தார். இதனால் பலரும் அவரை சூப்பர்ஹீரோ போல கொண்டாடினர்.

இந்நிலையில் மும்பை மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ என சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்துள்ளது. மொத்தம் 6 இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் டெல்லி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டு திட்டத்தின் விளம்பர தூதராக சோனு சூட் நியமிக்கப்பட்டு இருந்தார். அது நடந்து சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொரோனா காலத்துக்கு முன்னதாக சினிமாவில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார்.

ஆனால் கொரோனா காலத்துக்கு பிறகு அவரை பலரும் சூப்பர்நாயகன் என்று கொண்டாடினர். அதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். அதை தொடர்ந்து அடுதத் ஆண்டு நடக்கும் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

From Around the web