கொரோனா எதிரொலி: மீண்டும் ஓ.டி.டி-க்கு வரும் நடிகை த்ரிஷா..!

 
கொரோனா எதிரொலி: மீண்டும் ஓ.டி.டி-க்கு வரும் நடிகை த்ரிஷா..!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், பிரபல இயக்குநரின் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வந்த படத்தின் ரிலீஸ் ஓ.டி.டி தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

’எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ படங்களை இயக்கியுள்ள சரவணன் அடுத்ததாக உருவாக்கியுள்ள படம் ‘ராங்கி’. த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம், பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்துள்ளார்.

மிகுந்த துணிச்சல் மிகுந்த அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் த்ரிஷா இந்த படத்தில் நடித்துள்ளார். பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியான போது படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் படத்தின் பணிகள் முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும், இதுவரை ‘ராங்கி’ படம் வெளிவரவில்லை. அதற்குள் கொரோனா பிரச்னை, திரையரங்களுக்கு கட்டுப்பாடு என்று பிரச்னைகள் தொடர இதனுடைய ரிலீஸ் மேலும் தள்ளிப்போனது.

இந்தாண்டுக்குள் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதனால் ராங்கி படக்குழுவினர் ஓ.டி.டி தளத்தில் இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From Around the web