கொரோனா எதிரொலி: பொன்னியின் செல்வன் ஷூட்டிங் திட்டத்தை மாற்றினார் மணிரத்னம்..!

 
கொரோனா எதிரொலி: பொன்னியின் செல்வன் ஷூட்டிங் திட்டத்தை மாற்றினார் மணிரத்னம்..!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு திட்டங்களை கொரோனா இரண்டாம் அலை காரணமாக மணிரத்னம் மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய சினிமாவால் கொண்டாடும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படைப்பாக உள்ளது பொன்னியின் செல்வன். தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையால் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

நடிகர் கார்த்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டதாக தெரிவித்தார். முன்னதாக மீதமுள்ள படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடந்த மணிரத்னம் திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த முயற்சி மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதன்படி இந்த படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் பணிகள் சென்னை அல்லது ஹைதராபாத்தில் நடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அரங்கம் அமைப்பு பணிகளும் வேகமெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web