கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தில் 5 பேருக்கு கொரோனா..!

 
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தில் 5 பேருக்கு கொரோனா..!

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படப்பிடிப்பில் 5 பேருக்கு கோவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கில் மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும்  சர்காரு வாரி பாட்டா படத்திற்கான படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு அரங்கிலேயே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளது. அதை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால் மகேஷ் பாபு, கீர்த்து சுரேஷ் உள்ளிட்ட முக்கிய பட்ககுழுவினர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

From Around the web