அமெரிக்க சென்று திரும்பிய நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா..!!

 
1

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில்  தனிமைப்படுத்திகொண்டார்.

நடிகர் கமல்ஹாசன், ‘ஹவுஸ் ஆப் கதர்’ என்ற பெயரில் பிரத்யேக ஆடை  பிராண்டை உருவாக்கியுள்ளார்.  காதி ஆடைகளை  மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமடைய செய்வற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அண்மையில் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்தார்.  சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய கமலுக்கு இருமல் இருந்து வந்தது.

இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.


 

From Around the web