நடிகை நந்திதாவுக்கும் கொரோனா !

 
நடிகை நந்திதாவுக்கும் கொரோனா !

தமிழ் திரையுலகில் தமது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர் நடிகை நந்திதா. இவர் அட்டகத்தி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, இடம்பொருள் ஏவல். புலி, கலகலப்பு 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிகை நந்திதாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நந்திதா தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், நடிகைகள் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

From Around the web