பிரபல பாலிவுட் இயக்குநருக்கு கொரோனா..!!

 
1

பிரபல பாலிவுட் டைரக்டர் ராகுல் ராவேல். இவர் லவ் ஸ்டோரி, பிதாப், அர்ஜுன், அன்ஜாம், அர்பியார் கோ கயா உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்.

இந்நிலையில் ராகுல் ராவேலுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்தில் பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோர் கொரோனா தொற்றில் சிக்கி சிகிச்சைக்கு பின் மீண்டார். பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் மற்றும் அவரது சகோதரி அன்ஜுலா கபூர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாலிவுட் நட்சத்திரங்கள் அடுத்தடுத்து கொரோனாவில் சிக்குவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

From Around the web