‘இசைக்குயில்’ லதா மங்கேஷ்கருக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

 
1

இந்தியாவின் ‘இசைக்குயில்’ என வர்ணிக்கப்படுபவர் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர். இவர் தமிழ், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். 92 வயதான லதா மங்கேஷ்கர் பாரத ரத்னா, பத்ம பூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.  

இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வரும் லதா மங்கேஷகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக லதா மங்கேஷ்கரின் மருமகள் கூறுகையில், ‘வயது முதிர்வு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் (லதா மங்கேஷ்கர்) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் உள்ளார். எங்களின் தனிப்பட்ட வாழ்விற்கு மதிப்பளியுங்கள். லதா மங்கேஷ்கருக்காக பிரார்த்தியுங்கள்’ என்றார்.

From Around the web