தேசிய விருது பெற்ற பிரபல நடிகைக்கு கொரோனா...!!

 
1

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முன்னணி கதாநாயகியாக பலருடன் நிறைய படங்களில் நடித்துள்ளார். விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர், சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மகாநதி படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். அதுபோக தமிழ் நெஞ்சங்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் தமிழில் இருந்துகொண்டு பல மொழித் திரைப்படங்களிலும் அசால்ட்டாக நடித்து வருகிறார்.தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு: அனைவருக்கும் வணக்கம், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டாலும், லேசான கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது. எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது வைரஸ் பரவும் வேகத்தை பயமுறுத்தும் நினைவூட்டலாகும். அனைத்து கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்.  விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன், விரைவில் மீண்டும் செயல்படத் தொடங்குவேன்." என்று தெரிவித்துள்ளார். 
 


 


 

From Around the web