பிரபல இளம் நடிகைக்கு கொரோனா !!

 
பிரபல இளம் நடிகைக்கு கொரோனா !!

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

நடிகர்கள் அமீர்கான், அக்‌ஷய்குமார், மாதவன், டோவினோ தாமஸ், நடிகைகள் அலியாபட், கத்ரினா கைப், நிவேதா தாமஸ், டைரக்டர் விஜயேந்திர பிரசாத் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களில் சிலர் சிகிச்சைக்கு பின் குணமாகி மீண்டுள்ளனர்.

இந்நிலையில் இளம் நடிகையான பிரபல பஞ்சாப் மொழி நடிகை சாரா குர்பால் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சாரா குர்பாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தற்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

A post shared by Sara Gurpal (@saragurpals)

From Around the web