கொரோனா வந்திருச்சு... என்ன பண்ண..? காளி வெங்கட் வீடியோவில் உருக்கம்..!

 
1

தமிழ் சினிமாவில் முக்கிய குணச்சித்திர நடிகராக இருந்து வரும் காளி வெங்கட் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘வா’ என்கிற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் காளி வெங்கட். அதை தொடர்ந்து உதயம் என்.ஹெச் 4, பண்ணாயாரும் பத்மினியும், தெகிடி, மாரி, ராட்சசன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார் காளி வெங்கட். இந்நிலையில் கடந்த மாதம் காளி வெங்கட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 21 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.


இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், கொரோனா வந்தவுடன் எப்படி மீண்டு வரலாம் என்று சிந்தித்தேன். மருத்துவர் முருகேஷ் பாபு அதற்கு உதவியாக இருந்தார். கொரோனா வந்துவிட்டாலும் யாரும் துவண்டுவிட வேண்டாம். 

அந்த சமயத்தில் தைரியமாக இருப்பதே முக்கியம். முக்கிய அறிகுறிகள் ஏதாவது தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகிவிட வேண்டும். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நிச்சயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வரலாம் என்று அந்த வீடியோவில் காளி வெங்கட் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

From Around the web