கொரோனா, திருமணத்துக்கு நடுவில் சத்தமே இல்லாமல் புதிய படத்தில் நடித்த காஜல்..!

 
கோஷ்டி படக்குழு

திருமணத்துக்கு பிறகு அதிக படங்களில் நடிக்க துவங்கியுள்ள நடிகை காஜல் அகர்வால், கொரோனா பிரச்னைக்கு இடையில் ஒரு புதிய படத்தில் நடித்து முடித்து கோலிவுட்டை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

கல்யாண் என்பவர் இயக்கியுள்ள படம் ‘கோஷ்டி’. அரசியல் கலந்த காமெடிப் படமாக தயாராகியுள்ள இந்த படத்தில் கே.எஸ். ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு, சத்யன், தேவதர்ஷினி, ஸ்ரீமன், மனோபாலா, நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். 

இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் இணைந்து தயாரித்துள்ளனர். சாம். சி.எஸ் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ள இந்த படம் விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய படத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம், தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து படத்திற்கான பணிகள் துவங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ஒத்துழைப்பு அளித்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு நன்றி என்று கூறினார்.

From Around the web