கொரோனானு ஒன்னு இல்லவே இல்ல... மன்சூர் அலிகான் மீண்டும் சர்ச்சை..!

 
1

நேற்றைய  தினம் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காலை முதலே அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.அந்த வகையில் மன்சூர் அலிகான், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

விஜயகாந்தை பார்த்துவிட்டு வெளியே வந்த மன்சூர் அலிகான் கூறுகையில், “நானும், லியாகத் அலிகானும் விஜயகாந்துடன் இருந்திருந்தால் இந்நேரம் அவர் முதல்வராக இருந்திருப்பார். கொரோனா என்று ஒன்றும் இல்லை. அதை வைத்து ஏமாற்றுகின்றனர்” என கூறியுள்ளார்.

முன்னதாக நடிகர் விவேக் உடல்நலக் குறைவால் இறந்தபோது அதை கொரோனா தடுப்பூசியுடன் சம்பந்தபடுத்தி பேசியதற்காக மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் நீதிபதிகளின் அறிவுரையை ஏற்று இனி கொரோனா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேச மாட்டேன் என மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் கொரோனா குறித்து பேசியுள்ளார். கொரோனாவின் இரு அலைகளிலும் லட்சக்கணக்கானோர் இந்தியாவில் இறந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா என்பது ஏமாற்று வேலை என மன்சூர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web