நடிகை தீபிகா படுகோனேவின் தந்தைக்கு கொரோனா- தாய், தங்கைக்கும் பரவியது..!

 
தீபிகா படுகோனே குடும்பத்தினர்

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் தந்தை, தாய், சகோதிரி ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவருடைய தந்தை பிரகாஷ் படுகோனே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனேவின் தந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது. உடலில் வெப்பநிலை அதிகமாக இருந்த காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை தீபிகாவின் தாய் உஜ்ஜாலா மற்றும் இளைய சகோதிரி அனிஷாவுக்கும் கொரோனா தொற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் பெங்களூருவில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். எனினும், நடிகை தீபிகா கணவர் ரன்வீர் சிங்குடன் மும்பையில் உள்ளதாக கூறப்படுகிறது.

அவருடைய தந்தை பிரகாஷ் படுகோனேவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என கன்னட ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன. 

From Around the web