10 லட்சம் இருந்தா சேஷூவை காப்பாற்றி இருக்கலாமா?

 
1

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபா என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நகைச்சுவை நடிகர் சேஷு..அதன் பின்னர் சந்தானம் நடித்த சில படங்களில் நடித்தார் என்பதும் சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்று மதியம் அவர் காலமானார் 

நடிகர் சேஷூ குறைந்த சம்பளம் தான் வாங்கிக் கொண்டு இருந்தாலும் அவர் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தை உடையவர் என்றும் தன்னால் முடிந்த உதவிகளை அவர் பலருக்கு செய்து உள்ளார் என்பதும் ஒரு சிலருக்கு திருமணம் கூட தனது சொந்த செலவில் நடத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன்னைச் சுற்றி உள்ளவர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்த சேஷூவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டபோது 10 லட்ச ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்றும் ஆனால் அவரை காப்பாற்ற பணம் வேண்டும் என்று சினிமா துறையினரிடம் அவரது குடும்பத்தினர் கெஞ்சிய போது ஒருவரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

சேஷூவுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததால் தான் அவர் காலமானார் என்றும் நடிகர் சந்தானம் உள்ளிட்ட நடிகர்கள் பலர் கோடிக்கணக்கில் தற்போது சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் 10 லட்ச ரூபாய் கொடுத்து உதவி செய்யாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

From Around the web