அண்ணன் சீமானின் ராஜா அவதாரம்- வைரல் செய்யும் தம்பிகள்..!

 
சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சரித்திர கால தோற்றத்தில் இருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதுகுறித்த பின்னணியை பார்க்கலாம்.

தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சீமான் முன்னதாக பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் தங்கர் பச்சான், முத்தையா போன்றோர் இயக்கிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் அவர் நடித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியை நிறுவி திரைத்துறையில் அவர் முற்றிலும் ஒதுங்கிவிட்டார். சட்டசபை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலிலும் அவர் போட்டியிட்டார். இந்நிலையில் மீண்டும் அவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடவுள் என்கிற பெயரில் தயாராகும் அந்த படத்தில் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவருடன் சத்யராஜும் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை வேலு பிரபாகரன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் யாரும் உறுதி செய்யவில்லை. எனினும் சீமானின் இந்த சரித்திர தோற்றம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை இந்த புகைப்படங்கள் மிகவும் கவர்ந்துள்ளன.

From Around the web