இந்தியன் 2 திரைப்பட விவகாரத்தை முடித்து வைத்த நீதிமன்றம்..!

 
இந்தியன் 2 படம்

லைக்கா நிறுவனம் மற்று ஷங்கர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து, இந்தியன் 2 விவகாரம் முடித்துவைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் ஷங்கர் வேறொரு படத்தை இயக்கக் கூடாது என லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டது. தனி நீதிபதி இவ்வழக்கை தளுப்படி செய்தது அடுத்து, வழக்கு மேல்முறையீட்டுக்கு சென்றது.

நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக கடந்த 28-ம் தேதி நடந்த விசாரணையில் லைகா நிறுவனம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி இவ்வழக்கில் மத்தியஸ்தம் செய்யவுள்ளார். மேலும் அதுவரை ஷங்கர் வேறொரு படத்தை இயக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தப்போவதில்லை என்று கூறினார்.

அப்போது ஷங்கர் தரப்பில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

From Around the web