கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் காதலிக்கும் பெண் யார் தெரியுமா..?

 
காதலியுடன் கே.எல். ராகுல்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல். ராகுல் பிரபல பாலிவுட் நடிகரின் மகளை காதலித்து வருவதை இன்ஸ்டாகிராம் மூலம் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 5-ம் தேதி பிரபல நடிகை அதியா ஷெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு வாழ்த்துக் கூறிய கே.எல். ராகுல் “என்னுடைய மனம் கவர்ந்த காதலிக்கு வாழ்த்துக்கள்” என்று கூறி பதிவிட்டார்.

இதன்மூலம் கே.எல். ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் காதலித்து வருவது உறுதியாகியுள்ளதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடிகை அதியா ஷெட்டி பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தில் சுனில் ஷெட்டி வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வீரர்கள் நடிகையை காதலிப்பது புதியது அல்ல. ஏற்கனவே கிரிக்கெட் வீரர் விராட் கோலி பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்தது கவனிக்கத்தக்கது.
 

From Around the web