முன்னாள் நடிகை திவ்யா உன்னியின் தற்போதைய நிலை இதுதான்..!!

 
divya unni
தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்த திவ்யா உன்னி நீண்ட இடைவேளைக்கு பிறகு ஊடகங்கள் மத்தியில் வரத் துவங்கியுள்ளார். அவர் தொடர்பான செய்திகள் பலரால் ஆர்வமுடன் படிக்கப்பட்டு வருகின்றன.

மலையாளத்தில் 1996-ம் ஆண்டு வெளியான கல்யான சவுகாந்திகம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா உன்னி. தொடர்ந்து 1999-ம் ஆண்டு வரை மலையாளப் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

கடந்த 2000-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘கண்ணன் வருவான்’ என்கிற படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அவர் அறிமுகமானார். அதை தொடர்ந்து சபாஷ், பாளையத்து அம்மன், வேதம் போன்ற படங்களில் நடித்தார். 

இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் திவ்யா உன்னி நடித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு சுதிர் மேனன் என்பவரை திருமணம் செய்த இவர், இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.

குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வந்த திவ்யா உன்னி, 15 ஆண்டு திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு  சுதிர் மேனனிடம் இருந்து விவகாரத்து பெற்றார். அமெரிக்காவில் இருந்து குழந்தைகளுடன் கேரளாவுக்கு திரும்பிய திவ்யா உன்னி, மலையாள சீரியல்கள், மேடை நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ என பிஸியானார்.

divya unni

இதையடுத்து 2018-ம் ஆண்டு அருண் குமார் என்பவருடன் திவ்யா உன்னிக்கு இரண்டாவது திருமணம் நடந்தது. அவர்கள் இருவருக்கும் தற்போது குழந்தை உள்ளது. இந்நிலையில் தன்னுடைய கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் மீண்டும் அமெரிக்காவுக்கே திவ்யா உன்னி சென்றுவிட்டார். 

அவ்வப்போது மலையாள சினிமா நிகழ்ச்சிகள், படங்களில் நடிப்பதற்கு இந்தியா வந்து போகிறார். கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளார். அதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

From Around the web