இந்த வாரம் திரையரங்குகள், ஓ.டி.டி-யில் வெளியாகும் படங்கள்- முழு விபரம்...!!
தமிழ்நாட்டில் இந்த வாரம் அரை டஜன் படங்கள் வெளிவரவுள்ளது. அதனால் திரைப்பட ஆர்வலர்களுக்கு வரும் ஏப்ரல் 7-ம் தேதி ஒரு கொண்டாட்டமான நாள் என்றே சொல்லலாம். அந்த வகையில் நடப்பு வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் ஓ.டி.டி ரிலீஸ் குறித்து முழு விபரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
இந்த வாரம் திரையரங்குகளில் மொத்தம் 8 படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அயோத்தி உட்பட 3 படங்கள் ஓ.டி.டி-யில் இந்த வாரம் வெளிவர தயாராகவுள்ளன.
1947 ஆகஸ்டு 16
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த அடுத்தநாள் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து 1947 ஆகஸ்டு 16 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு என்.எஸ். பொன்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கவுதம் கார்த்திக், புகழ், ரேவதி ஷர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பான் இந்தியன் படமாக தயாராகியுள்ள இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
கருங்காப்பியம்
இந்த வாரம் வெளியாகும் படங்களில் மிகவும் முக்கியமானது கருங்காப்பியம். முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ரைசா வில்சன், ஜனனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அவர்களுடன் கலையரசன், கருணாகரன், ஷாரா, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஓ.டி.டி ரிலீஸ்
திரையரங்கில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இந்த படம் வரும் 7-ம் தேதி ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளிவருகிறது. அதேநாளில் மிர்னா நடித்துள்ள புர்கா திரைப்படம் ஆஹா ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இவற்றுடன் பிரஜன் நடிப்பில் உருவாகியுள்ள என் 4 திரைப்படம் சிம்பிள் சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளிவருகிறது.
ஓ.டி.டி ரிலீஸ்- மற்ற மொழிப் படங்கள்
மலையாளத்தில் பிரனய விலாசம் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்திலும், ரோமாஞ்சம் ஹாட்ஸ்டாரிலும் வெளிவருகிறது. தெலுங்கில் அசாலு என்கிற திரைப்படம் ’இ’டிவியின் ஓ.டி.டி வரும் 7-ம் தேதி வெளிவருகிறது. இதுதவிர காஸ்மோஸ், பீஃப் ஆகிய ஆங்கிலத் திரைப்படங்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளிவரவுள்ளன.