சமந்தா படத்தை விடவும் குறைந்த வசூலை பெற்ற நாக சைத்தன்யா படம்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வரிசையில் இருக்கும் வெங்கட் பிரபு, முதல்முறையாக மாற்று மொழியான தெலுங்கில் இயக்கியுள்ள படம் ‘கஸ்டடி’. இந்த படம் ஒரே நேரத்தில் தமிழிலும் தயாராகியுள்ளது. தெலுங்கில் ஹீரோவாக நடித்துள்ள நாக சைத்தன்யா தான் தமிழிலும் ஹீரோ.
அதேபோன்று கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி, வில்லன் வேடத்தில் சரத்குமார், மற்றொரு முக்கியமான வேடத்தில் அரவிந்த் சாமி மற்றும் ப்ரியாமணி உள்ளிட்டோர் தமிழ் பதிப்பிலும் நடித்துள்ளனர். மேலும் நாக சைத்தன்யா தமிழில் நடித்துள்ள இரண்டாவது படம், தமிழில் ஹீரோவாக நடித்துள்ள முதல் படம் என்கிற பெருமையுடன் கடந்த 12-ம் தேதி கஸ்டடி வெளியானது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை. இதுவரை வெளியான நாகசைத்தன்யா படங்களில் இருந்து சற்று வித்தியாசமான படைப்பாக இருந்தாலும், கஸ்டடி படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

அதனால் இந்த படம் முதல் நாளில் இரண்டு மொழிகளிலும் சேர்த்து ரூ. 4 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. முன்னதாக சமந்தா நடிப்பில் வெளியான ‘சாகுந்தலம்’ படம் படுதோல்வி அடைந்தது. அந்த படம் முதல் நாளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரூ. 5 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
 - cini express.jpg)