குக் வித் கோமாளிக்கு’ குட்பை சொன்ன மற்றொரு கோமாளி..!!
 

மிகவும் பிரபலமான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடப்பு சீசனில் புதிய கோமாளிகள் வந்ததை அடுத்து, ஏற்கனவே இருந்த கோமாளிகள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
 
CWC

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறியதை அடுத்து, மற்றொரு பிரபலமான கோமாளியும் வெளியேறப்போவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ ஷோவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. தொடர்ந்து நான்காவது சீசனாக இந்நிகழ்ச்சி வெற்றிநடை போட்டு வருகிறது. எப்படியாவது இந்நிகழ்ச்சிக்குள் நுழைந்த பிரபலமாக வேண்டும் என பல்வேறு தொலைக்காட்சி நட்சத்திரங்கள், சினிமா நடிகர்கள் உள்ளிட்டோர் விரும்புகின்றனர்.

கடந்த சீசனின் போது கோமாளி புகழ் பெரியளவில் நிகழ்ச்சியில் தோன்றவில்லை. அதற்கு காரணம், அப்போது அவர் நிறைய படங்களில் நடித்து வந்தார். அந்த படங்கள் அண்மையில் அடுத்தடுத்து வெளியாகின. ஆனால் புகழ் எதிர்பார்த்த அளவுக்கு பெரியளவில் ஓடவில்லை. மேலும் அவருடைய காமெடியும் பெருசாக பேசப்படவில்லை.

Kuraishi

இதை உணர்ந்த அவர், திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணி, மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு திரும்பிவிட்டார். நடப்பு சீசனில் ஒவ்வொரு எபிசோடும் தவறாமல் பங்கெடுக்கிறார்.  புகழ் அளவுக்கு பிரபலமாக இருந்த மற்றொரு கோமாளி மணிமேகலை, அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

அவரது இந்த அறிவிப்பு நிகழ்ச்சியை பார்த்து வந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அடுத்த சில நாட்களில் இன்ஸ்டாவில் அவர் புகைப்படம் பதிவிட்டு, சொந்த ஊரான திருப்பூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப்போவதாக தெரிவித்தார். இதனால் அவர் மீண்டும் தொலைக்காட்சிக்கு திரும்பப்போவதில்லை என்றும், மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.


இந்த வரிசையில் மற்றொரு பிரபலமான கோமாளியான குரேஷ் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவதாக ட்விட்டரில் பதிவிட்டார். அந்த ட்வீட்டில் ”CEC-யின் அனைத்து நினைவுகளுக்கும் நன்றி என்று கூறி”  பதிவிட்டு இருந்தார். ஆனால் போஸ்ட் போட்ட சில மணிநேரங்களில் அதை நீக்கிவிட்டார். தற்போது ’உடல் மண்ணுக்கு உயிர் சி.டபுள்யூ.சி’க்கு என்று பதிவிட்டுள்ளார். குரேஷியின் திடீர் பதிவுகள் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. 

From Around the web