அப்பா நலமுடன் உள்ளார்... மருத்துவமனையில் பாடகர் யேசுதாஸ் அனுமதி தகவலுக்கு மகன் மறுப்பு!
Feb 28, 2025, 06:35 IST

பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ்.தமிழ், கன்னடம், தெலுங்கு, அரபு, ரஷ்யன் மற்றும் பல மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும், எட்டு தேசிய விருதுகள் மற்றும் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்காள மாநில அரசின் விருதுகள் உட்பட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார். அவருக்கு 1975 இல் பத்மஸ்ரீ, 2002 இல் பத்ம பூஷண் மற்றும் 2017 இல் பிரபு விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையே, 85 வயதாகும் யேசுதாஸுக்கு வயது முதிர்வின் காரணமாக எழுந்த உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டதாகவும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
ஆனால், இந்த தகவலை மறுத்துள்ளார் அவரின் மகன் விஜய் யேசுதாஸ்."தந்தை யேசுதாஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை" என்றார்.