டான்ஸ் ஜோடி டான்ஸ் நடுவர் மாற்றமா ? யார் அந்த நடிகை தெரியுமா ?

‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் ரசிகர்களிடம் அதிக கவனத்தையும், திரைப்பார்வையையும் பெற்று வருகின்றது.
இந்த ஒளிபரப்புகளில் முக்கிய நடுவராக இருப்பவர் நடிகை சினேகா. எப்போதும் contestants-க்கான ஆழமான விமர்சனங்கள், நல்ல அப்சர்வேஷன்கள், பாசமிக்க பேச்சுகள் என எல்லா கோணங்களிலும் shine பண்ணும் இவர், இந்த வார எபிசொட்டில் காணப்படவில்லை.
இதைப் பார்த்த ரசிகர்கள், “என்னம்மா சினேகா மேடையில் இல்லையா?” என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளனர். பின்னர் வெளியான தகவலின்படி, சினேகா தற்போது லண்டனில் நடைபெறும் ஒரு பிரமாண்ட கடைத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் மட்டும் கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
சினேகாவுக்கு பதிலாக இந்த வாரம் பிரபல நடிகை நமிதா கலந்து கொண்டிருக்கிறார். இளசுகளின் கனவுக் கன்னியாக ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கலக்கிய நமிதா, இந்த வாரம் நடுவராக வந்து ஒரு கவர்ச்சி உணர்வைச் சேர்த்துள்ளார்.