டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சி செயல்..! சந்துருவிற்கு பிரைன் டியூமர்..!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்ட சந்துரு பலரையும் வியக்க வைத்திருக்கிறார்.
ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி பல திறமையானவர்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தி அடையாளப்படுத்தி இருக்கிறது. எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற கனவுகளோடு காத்திருப்பவர்களுக்கு இந்த மேடை பல வெற்றிகளை கொடுத்திருக்கிறது. அந்த வரிசையில் தற்போது மூன்றாவது சீசன் தொடங்கப்பட்டிருக்கிறது. அதுவும் இன்று இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
அது குறித்த ப்ரோமோ அடுத்தடுத்து வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது வெளியான ப்ரோமோ பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கிறது. அந்த ப்ரோமோவில் கலந்துகொண்ட போட்டியாளரின் பெயர் சந்துரு. அவரை பார்க்கும்போது அவருடைய வயது 35 வயதுக்குள் உள்ளே தான் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.ஆனால் அவர் தலையில் முடி இல்லாமல் தலையில் ஒரு தலைப்பாகை கட்டிக்கொண்டு டான்ஸ் ஆட வந்திருக்கிறார். அவர் மேடையில் நிற்கும் போது நடுவராக இருக்கும் சினேகா, பாபா பாஸ்கர் மற்றும் வரலட்சுமி மூன்று பேரும் வந்திருக்கிறார்கள். அப்போது சந்துருவின் மனைவியை கூப்பிடுகிறார்கள். சந்துருவின் மனைவி வந்து சொன்ன விஷயம் தான் எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
அதாவது சந்துருவிற்கு பிரைன் டியூமர் கன்ஃபார்ம் ஆகிவிட்டதாம். அதுவும் நான்காவது ஸ்டேஜில் சந்துரு இருக்கிறாராம். இப்போது அவருக்கு கீமோதெரபி ட்ரீட்மென்ட் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். இந்த ஹெல்த் கண்டிஷனில் கண்டிப்பா நீங்க பண்ணனுமா என்று சினேகா கேட்க, அதற்கு சந்துரு ஆமாம் நமக்கு பிடித்த வேலையை நாம பண்ணினாலே எல்லாம் சீக்கிரமா சரியாகிவிடும் என்று கண்கலங்க சொல்லி இருக்கிறார்.
அப்போது பாபா பாஸ்கர் இங்க டான்ஸ் ஆடுனா ஒருத்தனுக்கு குணம் ஆகுதுன்னா நீ கண்டிப்பா ஆடுடா என்று சொல்கிறார். அதற்கு பிறகு சந்துரு டான்ஸ் ஆடி முடிக்கிறார். அதைத்தொடர்ந்து பேசுகையில் இந்த காம்படிஷனை நான் அட்டென்ட் பண்ணுவதற்கு முக்கிய காரணம் என்னுடைய குழந்தை தான். பியூச்சர்ல எங்க அப்பா இவ்வளவு பெரிய விஷயத்தை உடைத்து வந்து இருக்காங்க என்று என் பொண்ணு சொல்லுவா. அதுக்காகத்தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
சந்துருவின் டான்ஸை பார்த்ததும் பாபா மாஸ்டர் உடன் சேர்ந்து மொத்த அரங்கத்தில் இருந்தவர்களும் அந்த மேடையை தொட்டு மரியாதை செலுத்தி இருக்கிறார்கள்.