தனுஷ் படத்தில் இருந்து வெளியேறிய டேனியல் பாலாஜி- பழிவாங்கப்பட்டாரா..??

சாணிக் காயிதம் படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர். இதில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், நிவேதித்தா சதிஷ், பிரிட்டன் நடிகர் எட்வர்ட் சானன்பிளிக், ஜான் கொக்கன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இவர்களுடன் பிரபல குணச்சித்திர நடிகர் டேனியல் பாலாஜியும் நடிப்பதாக இருந்தது. ஏற்கனவே அவர் தனுஷுடன் பொல்லாதவன் மற்றும் வடசென்னை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் கேப்டன் மில்லர் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவருடைய தேதியை வாங்கிவைத்து படக்குழு பயன்படுத்தாமல் இருந்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த டேனியல் பாலாஜி படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கேம்ப்டன் மில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் 30-ம் தேதி வெளிவரவுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.