தைரியமா இரு கண்ணா​​​​​​​.. உனக்காக நான் பிரார்த்திக்கிறேன்...உடல்நிலை பாதிக்கப்பட்ட ரசிகைக்கு ஆறுதல் சொன்ன ரஜினி..!!

 
1

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆர்.கே.வெங்கடேஷ். ரஜினி ரசிகரான இவரது மகள் சௌமியா கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தன் மகள் சௌமியா ரஜினியிடம் பேச வேண்டும் என்று விரும்புவதாக வெங்கடேஷ் வீடியோ ஒன்றில் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இந்நிலையில் தனது ரசிகரின் அந்த வீடியோவை ஏற்று ரஜினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஹலோ சௌமியா, எப்படி இருக்கிறாய்? உனக்கு ஒன்றும் ஆகாது. சாரி கண்ணா! என்னால் உன்னை வந்து பார்க்க முடியாது. இப்போது கரோனா பரவல் இருப்பதால், எனக்கும் சற்று உடம்பு சரியில்லை. இல்லையென்றால் உன்னை வந்து பார்த்திருப்பேன் கண்ணா. தைரியமாக இரு.. உனக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று ரஜினி பேசியுள்ளார்.

1

சூப்பர் ஸ்டாரின் இந்த ஆறுதலை எதிர்பார்க்காத ரசிகர் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ரசிகர்களும் தலைவர் வேற லெவல் என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் இந்த வீடியோ தற்போது வேகமாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


 


 

From Around the web