விஜய் டிவி சீரியலில் இருந்து வெளியேறிய தர்ஷன்- புது நடிகர் ஒப்பந்தம்..!

 
தர்ஷன்

காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் தர்ஷன் அந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘காற்றுக்கென்ன வேலி’. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் தர்ஷன் திடீரென தொடரில் இருந்து வெளியேறிவிட்டார்.

அவர் கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் அவர் அந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்து வந்த தர்ஷன் கதாபாத்திரத்தில் சுவாமிநாதன் என்பவரை தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் அவர் இந்த தொடரில் அறிமுகமாகவுள்ளார்.
 

From Around the web