தசரா படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா?

நானி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வெளியாகியுள்ள ‘தசரா’ படம் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்தது என்கிற புள்ளிவிவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 
 
dasara

கடந்த வியாழன்று தெலுங்கில் தயாராகியுள்ள நானியின் ‘தசரா’ திரைப்படம் நாடு முழுவதும் வெளியானது. தெலுங்கில் நேரடியாகவும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதை அடுத்து, பல மொழி பேசும் ரசிகர்களிடையே தசராவுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

தசரா' திரைப்படம் தமிழில் 150 திரையரங்களுக்கு மேல் வெளியிடப்பட்டது. தற்போது படம் வெளியான நாளில் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்தது என்ற புள்ளிவிவரமும் வெளியாகியுள்ளது. தெலுங்கு மாநிலங்களில் தசராவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மிகப்பெரிய ஹைப் மற்றும் முதல் நாள் வசூலைப் பெற்றுள்ளது.

தசரா நானியின் பான் இந்தியா ரிலீஸ் ஆகும். தெலுங்கு மட்டுமின்றி இந்தி, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளிலும் படம் வெளியாகியுள்ளது. அனைத்து பதிப்புகளும் வெளியான நாளில் 18 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. தெலுங்கு மாநிலங்களில் ராம நவமி விடுமுறை என்பதால் இந்தப் படம் கூடுதலாக வசூல் சாதனை படைத்துள்ளது.

வரவிருக்கும் வார இறுதியில் தசரா இந்த மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று வர்த்தக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.'தசரா' படத்தின் கதை சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தின் பின்னணியில் நானி நடிக்கும் 'தரணி' கதாபாத்திரத்தை சுற்றி வருகிறது. படத்தின் பட்ஜெட் 65 கோடி. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ‘வெண்ணெலா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமுத்திரக்கனி, சாய் குமார், ஷம்னா காசிம், ஜரீனா வஹாப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘தசரா’ படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு சிறப்பான கதாபாத்திரம் இருப்பதாக நானி கூறியிருந்தார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ‘வெண்ணெலா’வாக மிக அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ர்த்திக்கு பதிலாக ஒருவரைக் கண்டுபிடிக்க முடியாது. மிழ், தெலுங்கில் பல அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் 'தசரா' கீர்த்திக்கு மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

From Around the web