ரத்தம் தெறிக்க... தெறிக்க... இருக்கும் தசரா பட சென்சார் முடிந்தது- இதுதான் சான்றிதழ்.!!

நானி, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தசரா’ படத்துக்கான சென்சார் முடிந்தது சான்றிதழ் வழங்கிய விபரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
 
 
dasara

அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்தி இயக்கத்தில் நானி, தீக்‌ஷித் ஷெட்டி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தசரா’. மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, ரோஷன் மேத்யூ, சாய் குமார், ஜரீனா வகாப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தெலுங்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அடிதடி, த்ரில்லர், வன்முறை என ரத்தம் தெறிக்க தெறிக்க இருந்த டிரெய்லருக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்தன.

இந்நிலையில் படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர். வரும் 30-ம் தேதி ‘தசரா’ திரைப்படம் வெளிவரவுள்ளது. அதற்கு முன்னதாக படத்தை தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.


அதனுடைய முடிவுகளை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளன. அதன்படி ‘தசரா’ படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் படம் மொத்தம் 2.36 மணிநேரம் ஓடும் என்பது தணிக்கை சான்றிதழ் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வன்முறை காட்சிகள் நிறைந்த தசரா படத்துக்கு எப்பாடி யு/ஏ சான்றிதழ் கிடைத்தது என்கிற கேள்வியை நெட்டிசன்கள் பலரும் எழுப்பியுள்ளனர். ஒருவேளை நிறைய காட்சிகள் மற்றும் வசனம் இருந்து, அவை யு/ஏ சான்றிதழுக்கு வேண்டி தணிக்கை செய்யப்பட்டுவிட்டனவா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.
 

From Around the web