பாக்ஸ் ஆஃபிஸை துவம்சம் செய்யும் தசரா..!!

நானி , கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள தசரா திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் பெரியளவிலான வசூலை குவித்து வருவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
 
dasara

ஷ்யாம் சிங்கா ராய் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, நானி நடிப்பில் வெளியான படம் தசரா. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மிகப்பெரியளவில் கவனமீர்த்தது. மேலும் படத்தின் பாடல்கள், புகைப்படங்கள் வெளியாகி எதிர்பார்ப்புகளை எகிறச் செய்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 30-ம் தேதி இப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியானது. தெலுங்கில் நேரடியாகவும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டும் தசரா படம் வெளியானது. இப்படம் வெளியான முதல்நாளில் இருந்தே ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறது. 

dasara movie

வெளியான முதல் நாளில் தசரா திரைப்படம் ரூ. 10 கோடி வசூல் படைத்தது. இந்நிலையில் இந்த படம் ரூ. 100 கோடி வசூல் சாதனையை நோக்கி முன்னேறி வருவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தசரா திரைப்படம் ரூ. 100 கோடி வசூலை கடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web