ரூ. 100 கோடி வசூல் கொண்டாட்டம்- தசரா பட இயக்குநருக்கு கிடைத்த பரிசு..!!
புதுமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான படம் ‘தசரா’. கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கில் நேரடியாகவும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான பாடல்களுக்கு ஏற்கனவே ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கி இருந்தனர். அதனால் ஆரம்பம் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. இதையடுத்து படம் ரீலிசான நாள்முதல் வசூலை வாரி குவித்தது.
இதன்மூலம் தசரா திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ. 100 கோடி வசூலை கடந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனுடைய மெகா வெற்றியை கொண்டாடும் விதமாக, படத்தின் தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி தசரா படக்குழுவினர் அனைவருக்கும் 10 கிராம் தங்க நாணயங்களை பரிசாக வழங்கினார்.
அதை தொடர்ந்து படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடலாவுக்கு ரூ. 1 கோடிக்கு அதிகமான பி.எம்.டபுள்யூ காரை தயாரிப்பாளர் சுதாகர் பரிசாக வழங்கியுள்ளார். அந்த நிகழ்வில் நானி உள்ளிட்ட தசரா படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.