காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்கு தேதி குறிச்சாச்சு..!
 

 
விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்து வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. அப்போது படத்தின் முதல் சிங்கிளும் வெளியானது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

இதனால் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டன. தற்போது படப்பிடிப்பு பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதியில் நிறுத்தப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கப்படவுள்ளன.

ஏறக்குறைய படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதால், இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதை தொடர்ந்து இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். ஆயுத பூஜைக்கு விடுமுறையின் போது படத்தை வெளியிட திட்டமிட்டு படத்தின் பணிகளை வேகப்படுத்தியுள்ளனர்.

From Around the web