ரவுடி பேபி சாய் பல்லவியுடன் குத்தாட்டம் போடும் டேவிட் வார்னர்..!

 
ரவுடி பேபி சாய் பல்லவி

இந்திய சினிமா பாடல்களுக்கு ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி வீடியோ பதிவிட்டு வந்த கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவுடி பேபி பாடலுக்கு ரீஃபேஸ் வீடியோ பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு விளையாடி வருபவருமான டேவிட் வார்னர் அடிக்கடி தனது சமூகவலைதள பக்கத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் டான்ஸ் ஆடி வீடியோ பதிவிட்டு வருவார்.

இதற்காக அவருக்கென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனி ரசிகர் வட்டம் உண்டு. பெரும்பாலும் இவர் தெலுங்கு சினிமா பாடல்களுக்கு வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். ஆனால் தற்போது தமிழ் பாடல்களுக்கும் வீடியோ பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தனுஷ், சாய்பல்லவி நடித்த ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் உலகளவில் ஹிட்டானது. அந்த பாடலுக்கு ரீஃபேஸ் செய்து சாய்பல்லவியுடன் தான் ஆடுவது போன்ற வீடியோவை இன்ஸ்டாவில் டேவிட் வார்னர் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். பலரது வேண்டுகோளை ஏற்று இதற்கு பெயர் வையுங்கள் எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள டேவிட் வார்னர், தனுஷ் மற்றும் சாய் பல்லவியை தன்னுடைய வீடியோவில் டேக் செய்துள்ளார்.

From Around the web