இன்று வெளிவருகிறது டான் பட ஃபர்ஸ்ட் லுக்..!

 
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன் இணைந்து நடித்துள்ள ‘டான்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுமுகம் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘டான்’. டாக்டர் படத்துக்கு பிறகு ப்ரியங்கா மோகன் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, சூரி, முனீஸ் காந்த், சிவானி, புகழ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை லைக்கா புரொடக்‌ஷனுடன் இணைந்து சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரித்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள ’டான்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளிவரவுள்ளது. அதை தொடர்ந்து படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web