அஜித்திடம் மன்னிப்பு கேட்ட டிடி ... அதுவும் 10 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததுக்கு... 

 
1

அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட வேதாளம் படம் குடும்ப ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்தது.


இந்நிலையில் வேதாளம் படத்தில் அஜித் குமாரின் தங்கையாக நடிக்குமாறு தன்னிடம் கேட்டார்கள் என பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி தெரிவித்துள்ளார்.


வேதாளம் படத்தில் நடிக்க கேட்டும் மறுத்ததை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார். அவர் நடிக்க மறுத்ததற்கு முக்கிய காரணம் இருக்கிறது.

டிடி அக்காவுக்கு முழுங்காலில் பிரச்சனை ஏற்பட்டு அறுவை சிகிச்சைகள் நடந்தது அனைவருக்கும் தெரியும். 2014ம் ஆண்டில் முதல் முறையாக முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் டிடி. அந்த அறுவை சிகிச்சை முடிந்த 20 நாட்களில் அஜித் தங்கச்சி பாப்பாவாக நடிக்க கேட்கவே, பயத்தில் முடியாது முடியாது என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.


தன்னால் நடக்க முடியாது என்பதால் அப்படி சொல்லியிருக்கிறார். அதை நினைத்து ரொம்பவே ஃபீல் செய்திருக்கிறார். கேட்டதுமே முடியாது என சொல்லிவிட்டோமே என வருத்தப்பட்டிருக்கிறார்.


அவங்க மீதான மரியாதையில் தான் முடியாது என்று கூறியிருக்கிறார். அதே சமயம் அவர்களை நேரில் சந்தித்து சாரி சொல்ல வேண்டும் என நினைத்திருக்கிறார். 

டிடி கூறியதாவது,10 வருஷமா மனசுல வச்சிருக்கிறேன். இனி உங்களை சந்தித்து சாரி சொல்ல முடியுமானு தெரியல அஜித் சார். ஆனால் ரொம்ப சாரி சார். முதல் முறையாக அறுவை சிகிச்சை நடந்ததால் நடக்க முடியல, அடுத்து என்னவாகும்னு தெரியல. அந்த பயத்தில் நடிக்க முடியாதுனு சொல்லிவிட்டேன். முடியாதுனு சொல்லாமல் காரணத்தை சொல்லியிருக்கணும். ரொம்ப சாரி சார் என்றார்.


பத்து வருடமாக மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டார் டிடி. 

From Around the web