வெளிநாட்டு முதியவருடன் காதலா..?? டிடி வெளியிட்ட புகைப்படம்..!!
வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள டி.டி, அங்குள்ள முதியவர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக போட்டோஷூட் செய்துள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் கவனமீர்த்து வருகிறது.
Apr 18, 2023, 14:15 IST
தொலைக்காட்சி பிரபலமான டிடி என்கிற திவ்யதர்ஷினிக்கு மிகப்பெரியளவில் ரசிகர் வட்டம் உண்டு. மேடை நிகழ்வுகள் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரை எல்லாவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். அவ்வப்போது திரைப்படங்களிலும் நடிக்கிறார்.
தற்போது திவ்யதர்ஷினி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமான புடவையில் ஒரு போட்டோஷூட் செய்துள்ளார். அவருடன் வயதான ஒரு முதியவரும் போட்டோஷூட்டில் இடம்பெற்றுள்ளார்.
அவருடைய பெயர் ஃபிராங்கோ மஸேட்டி ஃப்ளோரன்ஸ் ஆகும். இவர் பிரபலமான மாடலாக உள்ளார். அவருடன் தான் டி.டி. போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த முதியவருடன் டிடி மிகவும் நெருக்கமாக தோன்றும் புகைப்படங்கள் காண்போரை ஆச்சரியமடையச் செய்துள்ளது.