‘அன்புள்ள கில்லி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

 
1

‘அன்புள்ள கில்லி’ திரைப்படம் இதுவரை உருவாகியிருக்கும் மனிதன், நாய் உறவு சம்பந்தமான கதைகளிலிருந்து மாறுபட்டு தனிச்சிறப்பான அம்சத்தை  கொண்டிருக்கிறது. மேலும் நாயின் மனகுரலில் கதை நகருவதாய் வெளிவரும் முதல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

பிரபல நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா இப்படத்தின் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, இவருடன் ஒரு லேப்ராடர் வகை நாயும் நடிக்கிறது. மேலும் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் மாஸ்டர் சேனல் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இந்தப் படத்தில் ஒரு நாயிக்கு குரல் கொடுத்துள்ளார் நகைச்சுவை நடிகர் சூரி. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. வித்தியாசமாக  உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

From Around the web