‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்துக்கு டிசம்பரில் விடிவுகாலம்..!

 
விஜய் சேதுபதி மற்றும் மேகா ஆகாஷ்

விஜய் சேதுபதி நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பாக உருவான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்துக்கு ஒருவழியாக ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

வெங்கட கிருஷ்ண ரோக்நாத் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் மேகா ஆகாஷ், மகிழ்திருமேனி, விவேக், மோகன் ராஜா, கரு. பழனியப்பன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மகிழ்திருமேனி, மோகன் ராஜா, கரு. பழனியப்பன் உள்ளிட்டோர் முன்னணி இயக்குநர்கள் ஆவர். அவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர், டீசர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பு பெற்றுவிட்டன. இந்நிலையில் தற்போது ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. அதன்படி இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

ஆனால் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படவில்லை. தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு வெளியாகி வரும் படங்கள் தோல்வி அடைந்து வருகின்றன. நிச்சயம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் வெற்றி அடையும் என படக்குழு கருத்து தெரிவித்துள்ளது.
 

From Around the web