பொதுமேடையில் ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்த தீபிகா படுகோன்..!!
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பதான்'. பல சர்சைகளுக்கு நடுவே வெளியான பதான் திரைப்படம் எதிர்ப்பர்த்ததை தாண்டி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த நிலையில் படத்தின் சக்சஸ் பார்ட்டி நிகழ்ச்சி கோலாகலமாக நடந்துள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபிகா, ஷாருக்கானிற்கு மேடையிலேயே முத்தமிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
விழாவில் இயக்குநர் சித்தார்த் அனந்த், நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் அப்ரகாம் உள்ளிட்ட பதான் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது படத்தின் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்ட தீபிகா, மேடையிலேயே ஷாருக்கானை கட்டி அனைத்து முத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பல சர்ச்சை, எதிர்ப்பு, இவை அனைத்தையும் கடந்து படம் தற்போது வெளியாகி, ரசிகர்களின் பேராதரவால் ரூ. 500 கோடியை கடந்து வசூல் வேட்டை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.