83 படத்திற்கு வரி விலக்கு அளித்த டெல்லி அரசு..!

 
1

உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 1983-ஆம் ஆண்டுதான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்திய அணி வென்றது. கபில்தேவ் தலையிலான இந்தியா அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வென்று சாதனை படைத்தது மறக்கமுடியாக நிகழ்வாக இருக்கிறது. இந்த போட்டியில் தமிழக வீரர் ஸ்ரீகாந்த்தும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

1

கபில்தேவ் தலைமையிலான அப்போதிருந்த இந்திய அணியில் , ஸ்ரீகாந்த், மொகிந்தர் அமர்நாத், யஷ்பால் சர்மா, மான் சிங், சந்தீப் படேல், கீர்த்தி ஆசாத், மதன்லால் உட்பட்ட தலைசிறந்த வீரர்கள் பங்கேற்றனர்.

1

இந்திய அணியின் இந்த சாதனை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. ‘83’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என 4 மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன், தஹிர் ராஜ் பாசின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.  இந்நிலையில் டிசம்பர் 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தேசப்பற்று காரணமாக டெல்லியில் இந்த படத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வரி விலக்கு அளித்துள்ளது.

From Around the web