ஓடிடி-க்கு வரும் சிவகார்த்திகேயன் படம்..!

 
சிவகார்த்திகேயன்

திரையரங்கு வெளியீட்டுக்காக ஓராண்டுக்கு மேல் காத்திருந்தும் கொரோனா பிரச்னை தொடர்ந்து வருவதால், சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படத்தை ஓ.டி.டி-யில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இதுவரை கனா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. இவர் மேலும் ஒரு படத்தை தயாரித்து முடித்துள்ளார். அதுதான் ‘வாழ்’. இது அருவி பட இயக்குநர் அருண் புருஷோத்தமன் இயக்கியுள்ள படமாகும். 

கடந்த 2019-ம் ஆண்டே இந்த படத்திற்கான பணிகள் அனைத்து முடிவிக்கப்பட்ட தணிக்கையும் செய்யப்பட்டுவிட்டது. இந்த படத்தை கடந்தாண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக படத்தின் வெளியீடு தாமதமானது.

தற்போது இந்தாண்டு வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாவது அலையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து படத்திற்கான திரையரங்க வெளியீடு தாமதமாகி வருவதால், வாழ் படத்தை ஓ.டி.டி-யில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி சோனி லிவ் நிறுவனம் ‘வாழ்’ படத்தை நல்ல விலை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சிவகார்த்தியேன் நடித்து தயாரித்துள்ள டாக்டர் படமும் ஓ.டி.டி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 
 

From Around the web