ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி- விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!

 
ரஜினிகாந்த் மற்றும் தேசிங்கு பெரியசாமி

அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தயாராகும் படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் சினிமாவில் இயக்குநராக கால்பதித்தவர் தேசிங்கு பெரியசாமி. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இப்படத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்சன், நிரஞ்சனி அகத்தியன், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தமிழக ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெளியான போது ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web