ஆர்யா படத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்- விபரம் உள்ளே..!
 

 
ஆர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலின்

ஆர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்று வரும் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளது சினிமாவில் கவனமீர்த்துள்ளது.

சுந்தர். சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அரண்மனை 3’. நகைச்சுவை கலந்த திகில் பாணியில் இப்படம் தயாராகியுள்ளது.
கொரோனா காலக்கட்டத்தால் இந்த படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பும், படத்தின் வெளியீடு தாமதமானது. இந்நிலையில் அரண்மனை 2 படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.

அவருடைய ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை இந்தியளவில் வெளியிடுகிறது. அதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ஆர்யா ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அரண்மனை 3 திரைப்படம் வரும் அக்டோபர் 14-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

From Around the web