‘விடுதலை‘ படத்தை பார்த்துவிட்டு சேத்தனை அடித்த தேவதர்ஷினி..!!

 
1

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ‘விடுதலை‘. இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ கௌதம் மேனன், சேத்தன் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். குறிப்பாக இப்படத்தில் சேத்தன் நடித்துள்ள ஓசி என்ற கொடூரமான போலீஸ் அதிகாரி வேடம் அவரை பெரிய அளவில் பேச வைத்திருக்கிறது. இந்நிலையில் சேத்தன் அளித்துள்ள ஒரு பேட்டியில், “ விடுதலை படத்தை பார்த்த எனது மனைவியான நடிகை தேவதர்ஷினி மற்றும் மகள் ஆகியோர் கோபத்தில் என்னை தியேட்டரிலேயே அடித்தனர். நான் நடித்துள்ள ஓசி கதாபாத்திரம் ரொம்ப அருவருப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதோடு இந்த படத்தை பார்த்த அவரது தோழிகள் இப்படிப்பட்ட ஒரு மனிதருடன் எப்படி நீ வாழ்கிறாய் என்று கேள்வி எழுப்பியதாக கூறினார். ஆனால் நான் அவர் சொன்னதை நினைத்து வருத்தப்படவில்லை. அந்த அளவுக்கு இந்த கேரக்டர் அவர்களை பேச வைத்திருக்கிறது என்று கூறியுள்ள சேத்தன், என்னுடைய நடிப்புக்கு இப்படிப்பட்ட விமர்சனம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்து வரவிருக்கும் விடுதலை-2 படத்திலும் நான் நடித்துள்ள ஓசி கேரக்டர் இன்னும் பெரிய அளவில் பேசப்படும்“ என்றும் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

From Around the web