எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் முக்கிய 2 பிரபலங்கள்..!!
தமிழ் சின்னத்திரை பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வரும் சீரியல் எதிர்நீச்சல். கடந்த வாரம் டி.ஆர்.பி ரிப்போட்டுக்கான பட்டியலில் இந்த சீரியல் முதலிடத்தை பிடித்தது.
தேவயானி நடிப்பில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் தான் எதிர்நீச்சல் நாடகத்தை இயக்கி வருகிறார். அந்த சீரியலில் சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்ணின் வளர்ச்சியை மையப்படுத்தி திரைக்கதை இருந்தது.

ஆணாதிக்கம் உள்ள குடும்பத்தில் மருமகள்களாக சென்றவர்களின் பிரச்னையை குறித்து எதிர்நீச்சல் சீரியல் பேசுகிறது. இந்த சீரியல் ஜி. மாரிமுத்து, கனிகா, ஹரிப்ரியா இசை, மதுமிதா. ஹெச், சத்யப்ரியா, ப்ரியதர்ஷினி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
தற்போது இந்த நாடகத்தில் பிரபல நட்சத்திரங்களான வடிவுக்கரசி மற்றும் தேவயானி இருவரும் எண்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுடன் எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.
 - cini express.jpg)