மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பும் தேவயானி..!!
 

அண்மையில் முடிவுற்ற ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலை தொடர்ந்து, மீண்டும் தேவயானி தொலைக்காட்சி தொடரில் நடிக்கவுள்ளார். அதுதொடர்பான முழு விபரங்களையும் பார்க்கலாம். 
 
 
devayani

90-களின் மத்தியில் முன்னணி நடிகையாக இருந்தவர் தேவயானி. இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டவுடன் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். அப்போது சன் டிவியில் கோலங்கள் சீரியல் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

இதுவரை எந்தவொரு நடிகைக்கும் கிடைக்காத பெயர் மற்றும் புகழை தொலைக்காட்சி துறையில் பெற்றார் தேவயானி. அவரை ஒரு திரைப்பட நடிகையாக கொண்டாடியதை விடவும், கோலங்கள் அபி என்று எண்ணி தமிழ் மக்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

இதையடுத்து மஞ்சள் மகிமை, கொடி முல்லை, முத்தாரம், ராசாத்தி என பல சீரியல்களில் நடித்துவிட்டார். செம்பருத்தி மற்றும் மாரி தொடர்களில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இவை எல்லாமே நல்ல ரேட்டிங் பெற்றன. இவர் கடைசியாக நடித்த சீரியல் புதுப்புது அர்த்தங்கள். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.

இதற்கும் பார்வையாளர்களிடையே வரவேற்பு அதிகரித்தது. இந்த சீரியல் முடிந்து ஓராண்டு காலம் எதிலும் நடிக்காமல் இருந்த அவர், தற்போது மீண்டும் சீரியலுக்கு திரும்புகிறார். இப்புதிய சீரியலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இப்புதிய சீரியலில் அவருடன் விஜி சந்திரசேகரும் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web