மருத்துவமனையில் தொப்புளை சுற்றி சரமாரியாக ஊசி போட்டுக் கொண்ட தனுஷ் பட நடிகை..! 

 
1

தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ என்ற திரைப்படத்திலும் பல தெலுங்கு மற்றும் கன்னட படத்தில் நடித்தவர் நடிகை மெஹ்ரின் பர்சிதா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் அவர் மருத்துவமனையில் படுக்கையில் படுத்திருப்பது போன்றும் அவரது தொப்புளை சுற்றி மருத்துவர்கள் ஊசி போடுவது போன்ற காட்சியும் உள்ளது.

இதுகுறித்து மெஹ்ரின் விளக்கம் அளித்த போது தனக்கு தற்போது 27 வயது ஆகிவிட்டதால் திருமணம் காலதாமதம் ஆகும் போல் தெரிகிறது என்றும் அதனால் தான் கருமுட்டையை சேமித்து வைத்துக் கொள்வதாகவும் பின்னாளில் திருமணம் நடந்தால் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இல்லாமல் இருக்கும் என்பதற்காக இதை செய்வதாகவும் தெரிவித்தார்.

முதலில் இதை வெளியே சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன் என்றும் ஆனால் திருமணம் காலதாமதம் ஆகும் பெண்களுக்கோ அல்லது திருமணத்திற்கு பின் குழந்தை தள்ளி போட வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கோ இது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் தான் சொல்கிறேன் என்றும் அவ்வாறான பெண்கள் கருமுட்டையை சேமித்து வைத்துக் கொண்டால் நினைத்தபோது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் என்றும், காலதாமதம் ஆகி திருமணம் செய்து அந்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் என்ன செய்வது என்பதற்காகத்தான் கருமுட்டையை சேமித்து வைத்துள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

From Around the web