ரஜினிகாந்தால் மனம்மாறிய தனுஷ்.. மீண்டும் இணைவது உறுதி..!

 
1

ராயன் படம் குறுகிய நாட்களுக்குள்ளேயே 100 கோடி ரூபாயை வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது. இவ்வாறு தனுஷ் சினிமா வாழ்க்கையில் கொடி கட்டி பறந்து வருகின்றார்.

ஆனாலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சர்ச்சை நிரம்பியதாக காணப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். எனினும் இவர்களின் திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. தற்போது விவாகரத்திற்கு விண்ணப்பித்து உள்ளார்கள்.

இந்த நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி தீபாவளி தினத்தன்று ரஜினிகாந்த் வீட்டில் தனுஷும் ஐஸ்வர்யாவும் சந்தித்துக் கொண்டதாகவும் அப்போது தனுஷிடம் ரஜினி மனம் விட்டு பேசியதாகவும் கூறப்படுகின்றது.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் தனது தரப்பு விஷயங்களை சொல்லி தாங்கள் இருவரும் மீண்டும் இணைவது உறுதி என்று ரஜினிக்கு வாக்கு கொடுத்துள்ளாராம். அன்றைய தினம் தனுஷும் ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடியதாகவும் அயல் வட்டாரம் தெரிவித்துள்ளதோடு  இதனால் ரஜினிகாந்தும் சந்தோஷமாக உள்ளாராம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

From Around the web